< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
|3 Oct 2023 1:52 AM IST
உவரி அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
உவரி அருகே கூட்டப்பனையை சேர்ந்தவர் சந்தியாகு ராயப்பன். இவரது மனைவி புஸ்பம் (வயது 65). இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. புஸ்பம் அவரது மகன் வினோத் வீட்டில் வசித்து வந்தார். வினோத் குடும்பத்தோடு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். தாயார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் மகன் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது தாய் புஸ்பம் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். சம்பவம் குறித்து அவரது மகன் வினோத் உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.