< Back
மாநில செய்திகள்
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி
|
5 Aug 2023 1:28 AM IST

நெல்லையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகத்தம்மாள் (வயது 90). இவர் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விரக்தியில் தனது உடம்பில் மண்எண்ணெணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்