< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
|11 Oct 2023 1:57 AM IST
தஞ்சையில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டியில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் இவரது மனைவி கமலம்(வயது 67). இவர் பல்வேறு குழுக்களிடம் இருந்து பணம் வசூலித்து அதனை நிதி நிறுவனத்தில் கட்டும் பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் வாங்கிய பணத்தை உரிய தேதியில் கட்ட முடியாமல் கமலம் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.