திருநெல்வேலி
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்-தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் தீர்மானம்
|பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம்
வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். 2004-ம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த 2004-ம் ஆண்டு முதல் பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கூட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் காந்திராஜா, பொருளாளர் சரவணகுமார், மகளிர் அணி செயலாளர் அனி அன்னபாக்கியமணி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜான்சன், பொருளாளர் ஹர்பான்சிங், தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி, செயலாளர் கனகராஜ், பொருளாளர் அருள்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.