< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை
விருதுநகர்
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
23 Jun 2023 1:23 AM IST

அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சர்க்கரை என்ற சர்க்கரை முத்து (வயது 82). இவர் 16 வயது மனநலம் குன்றிய சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சர்க்கரை முத்துவை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சர்க்கரை முத்துக்கு 20 ஆண்டு ஜெயிலும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்