< Back
மாநில செய்திகள்
மதுரவாயலில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலி - ஒருவர் காயம்
சென்னை
மாநில செய்திகள்

மதுரவாயலில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலி - ஒருவர் காயம்

தினத்தந்தி
|
30 May 2023 11:55 AM IST

மதுரவாயலில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் முதியவர் பலியானார்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் மித்ரன் (வயது 75). நேற்று காலை மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையின் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த தெருவில் நுழைய முயன்ற போது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மித்ரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் படுகாயம் அடைந்த முதியவர் மித்ரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். எதிரே வந்து மோதிய மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த சித்தார்த் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுபற்றி கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியான மித்ரன் நேற்று மதுரவாயலில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாக கூறப்படுகிறது. அது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்