< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி முதியவர் பலி
திருச்சி
மாநில செய்திகள்

ரெயில் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
18 April 2023 2:15 AM IST

ரெயில் மோதி முதியவர் உயிரிழந்தார்.

திருச்சி டவுன் ரெயில் நிலையம் மற்றும் பொன்மலை ரெயில் நிலையங்களுக்கு இடையே சம்பவத்தன்று ரெயில்வே தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளை நிற வேட்டி மட்டும் அணிந்து இருந்த அந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்