< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
3 July 2023 10:06 AM GMT

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

ஆரணி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 70). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி காலையில் ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் மாமண்டூர் அருகே சாலையோரம் மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் முனுசாமி மீது மோதியது. படுகாயம் அடைந்த முனுசாமி உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றிஇறந்து விட்டார்.

இது குறித்து முனுசாமியின் மகன் ஜெகன்குமார் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த முனுசாமிக்கு ஜெயா என்ற மனைவியும், ஒரு மகன் 3 மகள்கள் உள்ளனர்.


மேலும் செய்திகள்