தஞ்சாவூர்
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
|அய்யம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
அய்யம்பேட்டை:
முதியவர்
தஞ்சை அருகே வல்லம் சமுத்திரகுளம் தெருவை சேர்ந்தவர் ஹாஜா மைதீன் (வயது 60). இவர் நேற்று முன் தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் சக்கராப்பள்ளியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். அவர், தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாதிக்நகர் பிரிவு சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு எதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
மோட்டார் சைக்கிள் மோதி பலி
அப்போது அந்த வழியாக 16 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஹாஜா மைதீன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஹாஜா மைதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.