< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
லாரி மோதி முதியவர் பலி
|30 Aug 2023 1:25 AM IST
புவனகிரி அருகே லாரி மோதி முதியவர் பலியானார்.
புவனகிரி,
புவனகிரி அருகே உள்ள மேலமூங்கிலடி கிராமத்தை சேர்ந்தவர் கலியன்(வயது 73). மாற்றுத்திறனாளியான இவர், புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகில் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, எதிர்பாராதவிதமாக கலியன் மீது மோதியது. இதில் கலியன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான கடலூரை சேர்ந்த வீரமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.