< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அனுமந்தாபுரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் காயம்
|1 Sept 2024 10:44 AM IST
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தாபுரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் காயமடைந்தார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தாபுரம் பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இருந்து வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள், குண்டுகளை அங்குள்ளவர்கள் எடுத்து வந்து அதில் உள்ள இரும்பு, பித்தளை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில், கோதண்டன் என்ற முதியவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்து வந்து இரும்பு, பித்தளை பொருட்களுக்காக உடைத்தபோது அது வெடித்து சிதறியது. இதில் காயமடைந்த கோதண்டராமன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.