< Back
மாநில செய்திகள்
மின்வேலியில் சிக்கி முதியவர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

மின்வேலியில் சிக்கி முதியவர் பலி

தினத்தந்தி
|
28 Feb 2023 1:29 AM IST

விழுப்புரம் அருகே மின்வேலியில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 60). கடலூர் பண்ருட்டி கோழிப்பாக்கத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவர், விழுப்புரம் அருகே தென்குச்சிப்பாளையத்தை சேர்ந்த ராமராஜின் 30 ஏக்கர் நிலத்தை 12 ஆண்டுகளாக குத்தகை எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்த நிலத்தில் கடந்த 6 மாதமாக சுந்தரமூர்த்தி வேலை செய்து வந்தார். ராஜகோபால், அந்த நிலத்தில் தற்போது மணிலா பயிர் செய்துள்ளார். அதனை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக நிலத்தை சுற்றிலும் சட்டத்தை மீறி மின்வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு சுந்தரமூர்த்தி, வயல்வேலைக்கு சென்றவர் அங்குள்ள மின்வேலியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சுந்தரமூர்த்தி மனைவி ருக்மணி, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜகோபால், ராமராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்