< Back
மாநில செய்திகள்
தக்கலை அருகே குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

தினத்தந்தி
|
18 May 2023 1:00 AM IST

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி முதியவர் ,இறந்தார்.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள செம்பருத்தி விளை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 65). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. வில்லுக்குறி பகுதியில் உள்ள கடைகளில் கூலி வேலை செய்து வந்த இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் சரியில்லை. இதனால் அவர் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மணலி குளத்தில் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார்.

இதனை கவனித்த ஒரு நபர் உடனடியாக தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும், கொற்றிக்கோடு போலீசுக்கும் தகவல் கூறியுள்ளார். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய அந்தோணியை தேடினர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

பின்னர் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சப் -இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்