< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கன்னியாகுமரி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

தினத்தந்தி
|
22 Feb 2023 12:14 AM IST

கன்னியாகுமரி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் இறந்தார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளையை சேர்ந்தவர் தங்க நாடார் (வயது 70). இவர் நேற்று மாலையில் விஜய நாராயணபுரம் வாச்சான் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது அவர் குளத்தில் தவறி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடிய போது, தங்க நாடார் இறந்து கிடந்தார். அவர் குளத்தில் தவறி விழுந்த போது மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதுபற்றி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்