< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
|21 Jun 2023 1:04 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி முதியவர் பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை நேற்று காலை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளை நிற முழுக்கை சட்டையும், வெள்ளை நிற கட்டம் போட்ட லூங்கியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.