< Back
மாநில செய்திகள்

திண்டுக்கல்
மாநில செய்திகள்
ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

20 July 2022 10:15 PM IST
தண்டவாளத்தை கடந்தபோது, ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.
கொடைரோடு அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சி விநாயகர்நகரை சோந்தவர் நாச்சான் (வயது 72). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது வீட்டில் இருந்து நடந்து சென்று பொட்டிசெட்டிபட்டி ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு ரெயில், நாச்சான் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நாச்சான் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், ஏட்டு கருப்பையா, தனிப்பிரிவு ஏட்டு மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் நாச்சான் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.