< Back
மாநில செய்திகள்
சரக்கு வேன் மோதி முதியவர் பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சரக்கு வேன் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
23 Jun 2023 12:43 AM IST

சரக்கு வேன் மோதி முதியவர் பலியானார்.

கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (வயது 72). இவர், நேற்று மாலை தனது வீட்டிலிருந்து கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மறமடக்கி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் மகன் பூங்குழவன் (20) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக நடேசன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நடேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்