< Back
மாநில செய்திகள்
கார் மோதி முதியவர் சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கார் மோதி முதியவர் சாவு

தினத்தந்தி
|
12 Sep 2023 6:55 PM GMT

கார் மோதி முதியவர் இறந்தார்.

விராலிமலை தாலுகா செவனம்பட்டியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 65). இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் விராலூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக வைத்தியலிங்கம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வைத்தியலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்