< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
சுருண்டு விழுந்த முதியவர் சாவு
|5 Jun 2022 9:52 PM IST
பாப்பாரப்பட்டியில் சுருண்டு விழுந்த முதியவர் இறந்தார்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள என்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் (வயது 65). இவர் நேற்று பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி கிராமத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து சைக்கிளில் வந்துள்ளார். அப்போது போலீஸ் காலனி 7-வது குறுக்கு தெருவில் சைக்கிளில் வந்த முதியவர் சுருண்டு விழுந்தார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் முனியன் வெயில் தாக்கத்தால் இறந்து போனாரா? அல்லது உடல்நலக்குறைவால் இறந்தாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.