< Back
மாநில செய்திகள்
காப்புக்காட்டில் முதியவர் பிணம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

காப்புக்காட்டில் முதியவர் பிணம்

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

அனந்தபுரம் அருகே காப்புக்காட்டில் முதியவர் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனந்தபுரம்,

அனந்தபுரம் அருகே உள்ள காரை காப்புக்காடு வனப்பகுதியில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவருடைய உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில் மூடி கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், இதுபற்றி அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை பார்வையிட்டு, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பக்கத்து கிராமங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை திருவேற்காடு பகுதியில் வசித்து வந்த நாராயணன் (வயது 62) என்பதும், தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென் புதுப்பட்டு கிராமத்தில் நடந்த திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவை காண வந்தவர், காப்புக்காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அவருடைய மகன் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நாராயணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்