< Back
மாநில செய்திகள்
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
21 Sept 2023 2:03 AM IST

களக்காடு அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழகல்லடி சிதம்பரபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் அப்பாத்துரை (வயது 78). இவருக்கு நீர்கடுப்பு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆபரேஷன் செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனால் விரக்தி அடைந்த அப்பாத்துரை நேற்று வீட்டில் சமையலறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மகன் தங்கமணி (43) களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்