< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
|28 Aug 2023 12:39 AM IST
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவையாறு அருகே உள்ள நடுக்கடை முகமது பந்தர் கரீம்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜபருல்லா (வயது72). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ஜபருல்லா சம்பவத்தன்று வீட்டிேலயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி மும்தாஜ்பேகம் (62) அளித்த புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.