< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
|23 April 2023 1:18 AM IST
சங்கரன்கோவில் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி (70). இவருக்கு நீண்ட நாட்களாக கால் வலி இருந்து வந்தது. அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த குருசாமி சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.