< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
|13 July 2022 2:57 AM IST
களக்காட்டில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 77). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் அவர் 2-வதாக தங்கசெல்வம் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் சொத்தை பாக பிரிவினை செய்து பத்திரம் பதிவு செய்வதற்காக பணம் செலவு செய்வதில் ராஜலிங்கத்திற்கும், அவரது மனைவி தங்க செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த ராஜலிங்கம் நேற்று அதிகாலை சிதம்பரபுரம் செல்லும் சாலையில் அவரது வணிக வளாகத்தில் உள்ள கடை முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மகன் ஏசுதாசன் (50) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.