கன்னியாகுமரி
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
|மண்டைக்காடு அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று பகுதியைச் சேர்ந்தவர் முத்து நாடார் (வயது68). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்தார். சம்பவத்தன்று காலையில் இவருைடய மனைவி முத்துநாடாரிடம் வேலைக்கு செல்லுமாறு கூறி கண்டித்தார். உடனே முத்து நாடார் வெளியே சென்றார். பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பி வந்த அவர் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டி அழைத்தனர். ஆனால் உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முத்துநாடார் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து நாடார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.