< Back
மாநில செய்திகள்
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
28 July 2023 12:15 AM IST

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

திங்கள்சந்தை:

ஆளூர் அருகே உள்ள புன்னவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 64). அப்பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வந்தார். இவருைடய மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தங்கசாமி அவரது மகன் மணிகண்டபிரபுவுடன் (35) வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டபிரபு மனைவி குழந்தையுடன் ஈத்தாமொழியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தங்கசாமி வீட்டில் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை மணிகண்ட பிரபு குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார். அப்போது படுக்கை அறையில் தங்கசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மணிகண்டபிரபு இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்