< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
தக்கலை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
|20 March 2023 11:43 PM IST
தக்கலை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை,:
தக்கலை அருகே உள்ள தென்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் பிள்ளை (வயது 87). இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
தற்போது இந்த வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள், படுத்த படுக்கையான மனைவி பவானியுடன் ஸ்ரீதரன் வசித்தார். இந்த சோகமான சூழ்நிலையில் ஸ்ரீதரன் பிள்ளையையும் முதுமை வாட்டியது. இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.