< Back
மாநில செய்திகள்
முதியவர் அடித்துக் கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

முதியவர் அடித்துக் கொலை

தினத்தந்தி
|
8 Jan 2023 12:15 AM IST

விக்கிரவாண்டி அருகே முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி:

விழுப்புரம் வி.மருதூர் கொடி தெருவை சேர்ந்த கணபதி மகன் முருகன்(வயது 60). இவர் நேற்று காலை விக்கிரவாண்டி அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், முருகன் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சரவணன்(19) என்பவருடன் தனது மாட்டை விற்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் மாட்டை ரூ.16,500-க்கு விற்பனை செய்ததும், பணத்தை அவரிடம் இருந்து பறிக்க திட்டமிட்டு மது வாங்கி கொடுத்து, கட்டையால் அடித்து முருகனை சரவணன் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்