சேலம்
தாரமங்கலம் அருகேமுதியவர் அடித்துக்கொலை
|தாரமங்கலம் அருகே முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
தாரமங்கலம்
தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் தம்பி டாக்டர் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (42). தனசேகர் வீட்டில் பாலு வாடகைக்கு குடி இருந்து வந்தார். இந்த நிலையில் தனசேகர், பாலுவிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் பாலு நேற்று முன்தினம் வீட்டை காலி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தனசேகருக்கும், பாலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு கட்டையால் தனசேகரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தனசேகரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகர் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.