< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் கைது
|27 May 2024 1:53 AM IST
சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
சங்ககிரி,
சேலம் மாவட்டம் தேவூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 75). கூலித் தொழிலாளி. இவர், தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை நைசாக வீட்டுக்குள் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.