< Back
மாநில செய்திகள்
கரும்பு தோட்டத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட மூதாட்டி
விழுப்புரம்
மாநில செய்திகள்

கரும்பு தோட்டத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட மூதாட்டி

தினத்தந்தி
|
7 Jun 2023 12:15 AM IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே கரும்பு தோட்டத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் மனைவி அங்கம்மாள் என்ற சின்னப்பொண்ணு(வயது 75). சுயநினைவின்றி இருந்து வந்த இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமதுரை பனந்தோப்பு கரும்பு தோட்டத்தில் ஒரு எலும்புக்கூடு கிடந்தது. இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் முருகதாஸ் கொடுத்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எலும்புக்கூடை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கரும்பு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு காணாமல் போன அங்கம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது சாவுக்கான காரணம் என்ன? யாரேனும் அவரை கொலை செய்து பிணத்தை கரும்பு தோட்டத்தில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்