< Back
மாநில செய்திகள்
கிணற்றில் மூதாட்டி பிணம்
விருதுநகர்
மாநில செய்திகள்

கிணற்றில் மூதாட்டி பிணம்

தினத்தந்தி
|
13 Sept 2023 2:30 AM IST

கிணற்றில் மூதாட்டி பிணம் மீட்கப்பட்டது.

சிவகாசி,

சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் ராஜு மனைவி மாரியம்மாள் (வயது 79). இவர் தனது மகன் மாரியப்பன் பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் வெளியே சென்று வருவதாக தனது கணவர் ராஜுவிடம் கூறி விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜு, தனது மகன் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உறவினர்களுடன் சேர்ந்து தேடியபோது அதே பகுதியில் உள்ள கிணற்றில் மாரியம்மாள் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலையத்தினர் விைரந்து வந்து அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்