< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே ரெயில்வே அதிகாரி தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே ரெயில்வே அதிகாரி தற்கொலை

தினத்தந்தி
|
20 Jun 2023 3:07 PM IST

ஆவடி அருகே ரெயில்வே அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடியை அடுத்த மிட்டனமல்லி உதயசூரியன் தெருவை சேர்ந்தவர் வையாபுரி (வயது 43). இவருடைய மனைவி ஆதிர்ஈஸ்வரி (38). இவர்களுக்கு சிவராஜ்குமார் (18) என்ற மகனும், திவ்யலட்சுமி (13) என்ற மகளும் உள்ளனர்.

வையாபுரி, இந்திய விமானப்படையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று தற்போது சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஐ.சி.எப். ரெயில்வே தொழிற்சாலையில் ஜூனியர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை முதல் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில் வையாபுரி இரவில் தனது படுக்கை அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில்வே அதிகாரி வையாபுரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்