< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை
|4 Oct 2023 12:15 AM IST
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக இளையான்குடி வேளாண்மை துறை உதவி இயக்குனர் தங்கபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு உரங்கள் விற்பதற்கு தடை விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் இளையான்குடி வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் போன்ற வேளாண் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.