< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவள்ளூரில் தனியார் பள்ளிக்கு சீல்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்
|7 May 2023 2:19 PM IST
மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில், விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், கடந்த 1-ஆம் தேதி கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது, கோவிந்தன் மற்றும் சுப்புராயலு என்ற இரண்டு தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டார். மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பள்ளி நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்காததால், பள்ளியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.