< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை

தினத்தந்தி
|
14 Dec 2022 1:00 AM IST

பரமத்திவேலூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் 3 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்தன. இந்த வீடுகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், சாலை ஆய்வாளர்கள் சிவகாமி, ஞானசுப்பிரமணி, வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அப்போது இன்னும் 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு சம்மதம் தெரிவித்த அதிகாரிகள் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று கூறினர். இதனால் ஓலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்