< Back
மாநில செய்திகள்
88 கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

88 கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
14 July 2022 9:50 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 88 கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 88 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமையில் 19 மாவட்ட அளவிலான அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது குவாரிகளின் தற்போதைய நிலைமை, செயல்படும் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா, விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு அலுவலர்கள் குறித்த விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு விதிமீறல்கள் ஏதும் கண்டறியப்பட்டால் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்