திருவண்ணாமலை
ஆடி வெள்ளி விழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
|படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி வெள்ளி விழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிவெள்ளி விழா தொடங்கி 7 வாரங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் ஆரணி உதவி கலெக்டர் கவிதா தலைமையில் நடைபெற்றது.
அப்போது பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போளூர் மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா உள்பட அதிகாரிகள் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆய்வு செய்தனர்.
அப்போது படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், கோவில் செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன் உள்பட பலர் உடனிருந்தனர்.
ஆய்வின் போது ஆடி விழா நடைபெறும் போது சேரும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றவும், குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வாகன நெரிசலில் பக்தர்கள் தவிக்காமல் ஆங்காங்கே வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.