< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
பல்லாவரத்தில் ரூ.600 கோடி அரசு நிலம் மீட்பு
|6 Oct 2023 7:38 PM IST
பல்லாவரம் அருகே தனியார் ஆக்கிரமித்திருந்த ரூ.600 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
வணிக ரீதியான தொழிற்சாலை
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிராமம், புல எண் 166/2, 19,602 சதுர அடி நிலத்தை எம்.எம்.குப்தா என்பவர் எந்த வித அரசு அனுமதியும் இன்றி வணிக ரீதியான தொழிற்சாலை அமைத்து பயன்படுத்தி வந்தார்.
ரூ.600 கோடி நிலம் மீட்பு
இந்த நிலையில் அதனை நில ஒப்படை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 25.8.2023 அன்று வழங்கிய தீர்ப்பில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி தீர்ப்பின் அடிப்படையில் ரூ.600 கோடி மதிப்புள்ள தமிழக அரசுக்கு சொந்தமான நிலம் 5.10.2023 வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு மீட்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.