கரூர்
2-வது நாளாக உணவகங்களில் அதிகாரிகள் சோதனை
|கரூரில் 2-வது நாளாக உணவகங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.
2-வது நாளாக சோதனை
நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கரூரில் நேற்றுமுன்தினம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 8 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டன.
5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. இந்நிலையில் கரூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அசைவ உணவகங்களில் நேற்று மாநகர் நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அபாரதம்
இந்த சோதனையானது கோவை சாலை, 80 அடி சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள சுமார் 10 கடைகளில் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சிக்கன் உள்ளிட்ட காலாவதியான உணவு பொருட்கள் என சுமார் 10 கிலோ வரை உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக 5 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. மேலும் உணவகங்களில் சோதனையானது கரூரில் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.