< Back
மாநில செய்திகள்
இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை
நீலகிரி
மாநில செய்திகள்

இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை

தினத்தந்தி
|
26 Sept 2023 12:45 AM IST

கோத்தகிரியில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோத்தகிரி

கோத்தகிரியில் இறைச்சி கடைகள், ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

நாமக்கல்லில் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் சவர்மா தயாரிக்கும் ஓட்டல்கள் உள்பட அனைத்து ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், மீன் வளத்துறை சார் ஆய்வாளர் ஆனந்த், மேற்பார்வையாளர் ஜீவானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கோத்தகிரி பகுதியில் உள்ள மீன், கோழி இறைச்சி கடைகள், துரித உணவகங்களில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது மார்க்கெட் பகுதியில் உள்ள சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடும் நடவடிக்கை

இதையடுத்து 30 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் 4 மீன் கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடைகளில் மீன், இறைச்சி வகைகள், உணவு பொருட்கள் மீது ஈக்கள் மொய்க்காமல் இருக்க சுகாதாரமான முறையில் வலையை கொண்டு மூடி வைக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை மீன் மேல் அடிக்கடி வைக்க வேண்டும். கெட்டுப்போன இறைச்சி விற்றால், சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள துரித உணவகங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு கெட்டுப்போன இறைச்சி எதுவும் இல்லாததால், அறிவுரைகள் வழங்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்