< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மயானம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
|1 Sept 2023 6:00 AM IST
ஆண்டிப்பட்டி அருகே மயானம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜாக்காள்பட்டி ஊராட்சியில் அழகாபுரி கிராமத்தில் மயானம் உள்ளது. இந்த மயானம் அருகே உள்ள பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அனுமதியின்றி ஒரு கும்பல் மாட்டு வண்டிகள், டிராக்டர்களில் மணல் அள்ளி செல்கிறது. இதுகுறித்து கிராம மக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தெப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலர், ராஜதானி வருவாய் ஆய்வாளர், நில அளவையர் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், அந்த பகுதியில் மணல் அள்ளி செல்லும் கும்பல் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.