< Back
மாநில செய்திகள்
புகழூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் ஆய்வு
கரூர்
மாநில செய்திகள்

புகழூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
11 July 2022 12:04 AM IST

புகழூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கரூர் மாவட்டம் புகழூரில் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுநீர் புகழூர் வாய்க்காலில் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகளால் மாசு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கடந்த 7-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புகழூர் தாசில்தார் மோகன்ராஜ், நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத்தலைவர் பிரதாபன், நகராட்சி கமிஷனர் கனிராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சர்க்கரை ஆலைக்குள் சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஆலையில் இருந்து கரித்துகள்கள், கரும்பு சக்கை துகள்கள் வெளியேறுவதையும், ஆலையின் கழிவுநீர் புகழூர் வாய்க்காலில் கலந்து படுவதையும் பார்வையிட்டனர். அப்போது ஆலை நிர்வாக அதிகாரிகள் அனைத்தையும் சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். விரைந்து சரி செய்யுமாறு குழுவினர் ஆலை நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்