< Back
மாநில செய்திகள்
அதிக விபத்து நடந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
கடலூர்
மாநில செய்திகள்

அதிக விபத்து நடந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
22 July 2023 12:15 AM IST

சிதம்பரம் பகுதியில் அதிக விபத்து நடந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம்,

ஆய்வு

கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டர் வாகன ஆய்வாளர் விமலா, புதுச்சேரியை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை (நகாய்) அமைப்பு குழுவினர் நரேந்திரன், லட்சுமி ஆகியோா் சிதம்பரம், புவனகிரி, சிலம்பிமங்கலம், கொத்தட்டை, முட்லூர், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் அதிகளவில் விபத்து நடந்த இடங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த இடங்களில், வருங்காலத்தில் விபத்து ஏற்படாமல் எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து விவாதித்தனர். பின்னர் மனித தவறுகளால் ஏற்பட்ட விபத்துகளை தவிர்த்து, சாலை குறைபாடுகளால் ஏற்பட்ட விபத்துகளை தவிர்ப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இந்த கூட்டாய்வின் அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்படஉள்ளது.

விபத்துக்கான காரணம்

ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், இனிவரும் காலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் அவ்விடத்தில் ஒன்றாக சேர்ந்து விபத்துக்கான காரணத்தை உடனடியாக ஆய்வு செய்து குறைபாடு இருப்பின், அதனை உடனே நிவர்த்தி செய்யவேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஜீரோ டெத் என்ற தலைப்பில் மாவட்ட கலெக்டர் பேசியதை தொடர்ந்து அனைத்து துறைகளும் ஜீரோ டெத் என்பதை இலக்காக வைத்து பணியாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்