< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பள்ளிபாளையத்தில் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு
|30 Jun 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் பஸ் நிலைய சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் செல்வம் பணிகளை ஆய்வு செய்தார். தூண்கள் அமைக்கும்போது ஏற்பட்ட பெரிய குழி போன்றவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும், போது குழி தோண்டும்போது ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் மீதமுள்ள தூண்கள் விரைவில் அமைக்கப்படும் என்றும், அதன் பின்னர் பில்லர் அமைக்கும் பணி நடைபெறும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி பொறியாளர்கள் தாமரை, கபிலன் மற்றும் அதிகாரிகள் குழுவினர், நெடுஞ்சாலைதுறையினர் உடன் இருந்தனர்.