< Back
மாநில செய்திகள்
உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
17 Feb 2023 12:15 AM IST

பகண்டை கூட்டுரோடு பகுதி உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ரிஷிவந்தியம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் மற்றும் வேளாண் அலுவலர்கள் நேற்று பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலைக்கு விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் உர இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லறை விலை பட்டியல் விவரங்கள் தகவல் பலகையில் விவசாயிகளின் பார்வைக்கு தெரியுமாறு வைக்க வேண்டும். மேலும் விவசாயிகள் விருப்பத்திற்கு மாறாக உரங்களுடன் வேறு இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது. இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்