< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராணுவ அதிகாரிகள் வந்து செல்லும் கிளப்பிற்கு சீல் குன்னூரில் அதிகாரிகள் அதிரடி
|4 July 2023 2:57 AM IST
குத்தகை காலம் முடிவடைந்ததாகக் கூறி, அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்து சீல் வைத்தனர்.
குன்னூர்,
குன்னூரில் செயல்பட்டு வந்த தனியார் ஜிம்கானா கிளப்பிற்கு சீல் வைக்கப்பட்டது. தனியார் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கிளப்பில், பொழுதுபோக்கு அம்சங்களான, டென்னிஸ் கோர்ட், தங்கும் விடுதிகள், பார் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன.
இங்கு ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இதன் 99 ஆண்டுகள் குத்தகை காலம் முடிவடைந்ததாகக் கூறி, சென்னையில் இருந்து டிப்பன்ஸ் எஸ்டேட் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்து சீல் வைத்தனர்.