< Back
மாநில செய்திகள்
கடைகளில் அதிகாரிகள் சோதனை:கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்
தேனி
மாநில செய்திகள்

கடைகளில் அதிகாரிகள் சோதனை:கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:15 AM IST

போடி பகுதியில் கடைகளில் இருந்த 30 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போடி பகுதியில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உத்தரவின், பேரில் போடி உணவு பாதுகாப்பு அதிகாரி சரண்யா தலைமையில் அதிகாரிகள் போடி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பெரியாண்டவர் நெடுஞ்சாலையில் உள்ள மீன் கடைகளில் இந்த சோதனை நடந்தது. அப்போது 3 கடைகளில் கெட்டுப்போன மீன்கள் இறைச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 30 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்