< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மக்களை முகாம்களுக்கு வர கூறி கெஞ்சும் அதிகாரிகள்... வீடுகளை விட்டு வெளியேற மறுத்து அடம் பிடிக்கும் மக்கள்...
|17 Oct 2022 10:59 PM IST
சேலம் மாவட்டம் நடுவனேரி நிரம்பியுள்ளதால் மகுடஞ்சாவடி உலகப்பனூர் கிராமத்தில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நடுவனேரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ள நிலையில், அதிகாரிகள் எவ்வளவோ கெஞ்சியும் பொதுமக்கள் முகாம்களுக்கு வராமல் அடம் பிடித்து வருகின்றனர்.
நடுவனேரி நிரம்பியுள்ளதால் மகுடஞ்சாவடி உலகப்பனூர் கிராமத்தில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள் எவ்வளவோ கெஞ்சியும், இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.