< Back
மாநில செய்திகள்
வலையில் சிக்கிய டால்பினை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் - அதிகாரிகள் பாராட்டு
மாநில செய்திகள்

வலையில் சிக்கிய டால்பினை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் - அதிகாரிகள் பாராட்டு

தினத்தந்தி
|
16 Dec 2022 5:27 PM IST

கரைக்கு திரும்பிய பிறகு வலையில் டால்பின் சிக்கியுள்ளதைக் கண்ட மீனவர்கள் அதை மீண்டும் கடலில் விட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே வாலிநோக்கம் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் விரித்த வலையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட ஆண் டால்பின் சிக்கியுள்ளது.

மீன்களைப் பிடித்துக் கொண்டு வழக்கம்போல கரைக்கு திரும்பிய மீனவர்கள், தங்கள் வலையில் டால்பின் சிக்கியுள்ளதைக் கண்டனர். இதையடுத்து உடனடியாக அந்த டால்பினை அவர்கள் கடலில் விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், மீனவர்களின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், கீழக்கரை வனச்சரக அலுவலர் கனகராஜ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகளும் மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்